நீருக்குள் மீன்கள்
என்ன இது? மீன்கள் நீருக்குள்ளேதானே இருக்கும். இது தெரியாதா? எமக்கென்று ஆச்சரியமாகக் கேட்பது எனக்கு புரிகிறது. மீன்கள் நீருக்குள் வாழ்வதால் அதன் சுவாசத் தொகுதியானது நிலத்தில் வாழும் அங்கிகளின் சுவாசத் தொகுதியிலிருந்தும் முற்றும் மாறுபட்டது. மீன்கள் அவற்றின் பூக்கள் மூலம் நீரில் காணப்படும் ஒட்சிசனை பெற்று அதன் மூலம் சுவாசத்தை மேற்கொள்ளும். மீன்கள் அவற்றின் வாய்களினூடாக நீரை உள்ளெடுக்கும். இந்நீரானது பின்னர் அதன் தலையின் இருபுறமும் காணப்படும் பூக்களிற்கூடாக கடத்தப்படும். இதில் நீரில் கரைந்து காணப்படும் ஒட்சிசன், வடிகட்டப்பட்டு எடுக்கப்படும். மீதியான நீரானது, பூப்பிளவுகளினூடாக வெளியேற்றப்படும்.
பூப்பிளவு எனப்படுவது, பூக்களை மூடிக்காணப்படும் மூடி ஆகும். இது திறந்து மூடும் தன்மை உடையது. ஆகவே, மீன்கள் நீரினுள் இருக்கும் போது, அவற்றின் சுவாசத்திற்காக ஒட்சிசன் தேவைப்படும். நாம் மீன் தொட்டியில் அலங்கார மீன்களை வளர்க்கும் போது, அவற்றின் சுவாசத்திற்கு தேவையான ஒட்சிசன் அளவை வழங்க ஒட்சிசன் செலுத்தும் கருவியை (Oxygeniser) பயன்படுத்துவது கவனிக்கத்தக்கது.
